Saturday, March 15, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இளைஞன் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (10) இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ருடு-217 ரக விமானத்தில் தோஹா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு, அவர் தனது விமான அனுமதிப்பத்திரத்திற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கவுன்டருக்கு வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்ட விமான சேவை அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேறு ஒருவருக்குச் சொந்தமான கனேடிய கடவுச்சீட்டின் பயோ டேட்டா பக்கத்தில் உள்ள தகவல்கள் மாற்றப்பட்டு, இந்தக் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது போலியானது என இதன்போது தெரியவந்துள்ளது.

இந்த போலி கடவுச்சீட்டை தயார் செய்வதற்காக கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை தரகர் ஒருவருக்கு 40 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரைக் கைது செய்த குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles