பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்று 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபா முதல் 46 ரூபா வரை அதிகரித்தது.
நேற்று முன்தினம் முதல் முட்டை ஒன்றின் விலை 55 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என முட்டை வியாபாரிகள் தெரிவித்தனர்.
முட்டை விலை உயர்வால் கேக், இனிப்பு வகைகளின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.