Friday, March 14, 2025
26.2 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் கிளைமோர் குண்டுகளுடன் இருவர் கைது

கிளிநொச்சியில் கிளைமோர் குண்டுகளுடன் இருவர் கைது

கிளிநொச்சி – நாச்சிக்குடா பிரதேசத்தில் கிளைமோர் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் மற்றுமொருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களால் தயாரிக்கப்பட்ட 13 பெரிய அளவிலான சக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் வேலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மற்றைய நபர் கிளிநொச்சி – நாச்சிக்குடா கிராமத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நாச்சிக்குடா பகுதிக்கு சென்ற அதிகாரிகள் குழு சந்தேகத்தின் பேரில் குறித்த நபரின் பணியிடத்தை ஆய்வு செய்த போது, கிளைமோர் குண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தயாரித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles