அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு முன் முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஒக்டோபரில் 1.47 மில்லியன் பயனாளிகள் கணக்கிடப்பட்டனர். இது செப்டெம்பர் மாதத்தில் 1.377 மில்லியன் பயனாளிகளுடன் ஒப்பிடுகையில் 29இ932 அதிகமாகும்.
இந்நிலையில், அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 2 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு மிகவும் பொருத்தமான குழுவினரை தெரிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அஸ்வெசும சமூக நலத்திட்டத்தை செலுத்துவதற்காக அரசாங்கம் 205 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.