Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

அவுஸ்திரேலியாவில் குடியேறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

புலம்பெயருவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட புதிய திட்டத்தின் படி மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தொழில் திறன் கொண்டவர்களுக்கும் கடுமையான விசா விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், வீடு மற்றும் உள்கட்டமைப்புக்கான கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்தம் 250,000 பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதுடன், அதனை 125,000 ஆக குறைக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles