நாளை (12) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை அரச ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுப்பு அறிக்கையை முடித்துக் கொள்ள மாட்டோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.