Tuesday, August 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் மாயம்

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் மாயம்

எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சித்தியின் பராமரிப்பில் வளர்ந்த வரும் சிறுமி ஒருரே இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று பாடசாலைக்கு வராமல் சீருடையில் எம்பிலிப்பிட்டிய நகரில் இருப்பதை நண்பிகள் கண்டதாக பாடசாலைக்கு கிடைத்த தகவலின் படி சிறுமியின் உறவினர்கள் எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி சிறுமி பாடசாலைக்கு சென்ற வேனின் சாரதியை வரவழைத்து பொலிசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது, சிறுமி புத்தகங்கள் வாங்கவுள்ளதாக தெரிவித்து எம்பிலிப்பிட்டிய நகரில் வேனில் இருந்து இறங்கியதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியை கண்டுபிடிக்கும் வரை சாரதியை விடுவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும், பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், மதியம் வீட்டிற்கு வந்த சிறுமி, எம்பிலிபிட்டியவில் இருந்து சில புத்தகங்களை வாங்கிய பின்னர், சாரதி தன்னை வேனில் ஏற்றி சந்திரிகா ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறினார்.

இதற்கிடையில், பொலிஸாரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, அவர் தன்னை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வேனை பொலிஸார் கைப்பற்றிய போதிலும், திருமணமான 42 வயதுடைய சந்தேக நபரான சாரதி பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles