Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையாளர்களால் 38 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, வங்கிக் கணக்கின் ஊடாக பண மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை மற்றும் மஹியங்கனையை சேர்ந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles