15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளனர்.
மா ஓயாவில் தோஸ்தர வர என்ற இடத்தில் நீராடச் சென்ற நண்பர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வெலிஹேன மற்றும் தல்வகொடுவ பிரதேசத்தை சேர்ந்த இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர்கள் இருவரும் விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இந்த இடத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.