பதானயாய – ஊவா குடாஓய பகுதியில் குடாஓய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரம் இன்றி வைத்திருந்த வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும், 10 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பதானயாய ஊவ குடாஓய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குடாஓய பொலிஸார் தெரிவித்தனர்.