Tuesday, February 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரட்டை குழந்தைகளை ஏற்க மறுத்த தாய் - மூவருக்கும் பிணை

இரட்டை குழந்தைகளை ஏற்க மறுத்த தாய் – மூவருக்கும் பிணை

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறந்து 7 நாட்களே ஆன இரண்டு இரட்டைக் குழந்தைகளை பணத்திற்கு விற்ற சம்பவம் தொடர்பில் தாயையும் ராகம மற்றும் களனியில் வசிக்கும் இரண்டு பெண்களையும் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (07) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை இன்று (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் இன்று (08) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இரண்டு குழந்தைகளையும் விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம், இந்த வழக்கு ஜனவரி 12-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது.

இதேவேளை, 29 வயதான தாய் இரண்டு குழந்தைகளையும் பொறுப்பேற்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கொழும்பு காசல் வைத்தியசாலையில் அண்மையில் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles