Friday, January 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பாறையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அம்பாறை – மஹாஓய பிரதேசத்தில் மாட்டு கொட்டகை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாஓய – தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மஹாஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு அயலவர் வழங்கிய தகவலின் பிரகாரம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரும் மாட்டு கொட்டகையின் உரிமையாளரும் மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அதன்போது அருகில் இருந்த நான்கு பேர் தப்பி ஓட முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles