உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று அடுத்த வருடம் பாழடைந்த பாடசாலைகளின் கட்டிடங்களை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
74 பாழடைந்த பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அதில் மாணவர்களை தங்க வைக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அமைப்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சில மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற கட்டிடங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.