Tuesday, November 11, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவில் வாகன விபத்து: ஒருவர் காயம்

முல்லைத்தீவில் வாகன விபத்து: ஒருவர் காயம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – பரந்தன் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (07) காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் பிரதான வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், அதே பாதையில் பயணித்த பட்டா ரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதான இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் கடும் சேதத்திற்குள்ளாகியது.

குறித்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles