Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலனால் வன்புணரப்பட்ட காதலி உயிரை மாய்த்துக் கொண்டார்

காதலனால் வன்புணரப்பட்ட காதலி உயிரை மாய்த்துக் கொண்டார்

பதுளை – ரிதிபான பகுதியில் தனது காதலனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காதலி, தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

பதுளைஇ வேவெல்ஹின்ன – ரிப்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதுளையில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் குறித்த சிறுமி கடந்த 03 ஆம் திகதி தனது காதலனுடன் முச்சக்கர வண்டியில் ரிதிபான பகுதியில் உள்ள மலையை பார்க்கச் சென்றுள்ளார்.

இதன்போதே காதலனால் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கதியை எண்ணி விரக்தியால், வீட்டில் இருந்த மருந்து வகைகளை உட்கொண்டுள்ளார்.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் டிசம்பர் 04 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் 05 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான காதலன் நேற்று பகல் கைது செய்யப்பட்டுள்தளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் மற்றும் மகளிர் விசாரணை பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles