Saturday, May 17, 2025
27.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ ஐஸுடன் 'குடு தனு' கைது

ஒரு கிலோ ஐஸுடன் ‘குடு தனு’ கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், ‘குடு தனு’ என்று பிரபலமாக அறியப்பட்டவர் எனவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ‘மாத்தர கல்ப’ என்பவரின் உதவியாளர் எனவும் கூறப்படுகிறது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் வைத்து அவர் இன்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அவரிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் எடையுள்ள ‘ஐஸ், இலத்திரனியல் தராசு, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 12,000 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles