Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 கோடி ரூபாவுக்கு விற்க முயன்ற வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

3 கோடி ரூபாவுக்கு விற்க முயன்ற வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் நேற்று (05) இரவு நுவரெலியா விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை – கிரீன்லேன் ட்ரைவ் வீதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் வலம்புரி ஒன்றை விற்பனை செய்ய தயாராகி வருவதாக நுவரெலியா விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles