வெள்ளவ – பஹல வரத்தன பிரதேசத்தில் ரயிலில் மோதி பெண் ஒருவர் நேற்று (05) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது செல்ல நாயை ரயிலில் மோதாமல் காப்பாற்ற முற்பட்ட போதே, ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் மோதுண்ட பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சடலத்தை குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.