Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளையில் கட்டிடமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

தெஹிவளையில் கட்டிடமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (06) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தையில் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்ட 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டிடத்தின் 5வது மாடியில் நீல நிற பாலித்தீன் பையில் வெடிகுண்டு போன்ற ஒன்று பொதிந்திருப்பதைக் கவனித்த பாதுகாப்பு அதிகாரி இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸார் அந்த இடத்தை பார்வையிட்டபோது, ​​அது கைக்குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.

தெஹிவளை பொலிஸ் நிலையம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் கைக்குண்டை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles