க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் குறைவான பெறுபேறுகளை பெற்ற மாணவி ஒருவர், பெற்றோர் கண்டித்ததால், தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
வாலை அம்மன் வீதி, அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்றிருவு 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரிமேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.