Thursday, August 7, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியாருக்கு கைமாறும் மத்தள விமான நிலையம்

தனியாருக்கு கைமாறும் மத்தள விமான நிலையம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று(05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்கீழ் மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.

அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தினூடாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதனூடாக கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, அரசுக்கு சொந்தமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை பராமரிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles