சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.