Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தனது மகளை தாயாக்கிய ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது.

அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகளுக்கு 06 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

14 வயதுடைய சிறுமியின் தாயார் வெளிநாட்டில் இருந்தபோது, தந்தை குறித்த சிறுமியுடன் பாலுறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சிறுமி பலவந்தமாக வன்புணரப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

சிறுமி பெற்றெடுத்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதுடன், அதன் முடிவுகள் மற்றும் சிறுமியின் சாட்சியம் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குறித்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles