நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நேற்று காலை முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் மூவர் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மேலும் மூவரை கைது செய்ய கோரி தாக்கிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த முரண்பாடுக்கு பிரதானமாக செயற்பட மூவரும்பொலிஸரால் கைது செய்யப்பட்டதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.