ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) இரவு நாடு திரும்பினார்.
டுபாயில் நடைபெற்ற ‘காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்’ பங்கேற்பதற்காக அவர் கடந்த 30ஆம் திகதி சென்றிருந்தார்.
டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் நுமு 648 என்ற விமானத்தில் நேற்று (04) காலை 09.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.