டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 746 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நாளாந்தம் சுமார் 250 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.