பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமை, நாட்டில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராக இன்று (04) காலை தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வீதியூடாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது கலகத்தடுப்பு பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.