ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
பகிடிவதை தொடர்பான சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, குறித்த பல்கலைக்கழகத்தின் 6 மாணவர்களுக்கு வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.