அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை (Tactile ballot paper) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.
செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ரத்னாயக்க தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (01) பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.