பொல்கஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 56 வயதான கந்தகொல்ல, பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அலவ்வயிலிருந்து குருணாகல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த குறித்த நபர் அதிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.