இன்று (04) முதல் மூன்று நாட்களை பொது விடுமுறை தினங்களாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூறாவளி காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன.
இதற்கிடையில், கனமழையுடன் சென்னை விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று (04) காலை செய்தி வெளியிட்டிருந்தன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.