போலி விசாக்களை பயன்படுத்தி கட்டார் தோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நிட்டம்புவ, வத்துபிட்டியல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
கைதான இளைஞருக்கு 35 வயது எனவும், யுவதிக்கு 25 வயது எனவும் கூறப்படுகிறது.
இவர்கள் நேற்று (03) அதிகாலை 03.25 மணியளவில் கத்தார் எயார்வேஸ் விமானத்தில் தோஹா நோக்கி பயணிக்கவிருந்தனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தரகர் ஒருவருக்கு 80 இலட்சம் ரூபா கொடுத்து இந்த இரண்டு விசாக்களையும் ஏற்பாடு செய்ததாகவும்,அவர் தம்மை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் இருவரும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதன்படி, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.