1,406,932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்காக 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இந்த தொகை நாளை முதல் பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.
மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்கள் ஜூலை முதல் அமலுக்கு வரும் வகையில் பலன்களைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.