Saturday, May 10, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 8,400 அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக, அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலேயே அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

அதற்கமைய, இந்த அமைச்சில் 495,000 ஊழியர்கள் பணிபுரிவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் 18 முதல் 20 வருடங்களாக நிரந்தர நியமனம் பெறாத ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் நிரந்தர நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles