15 வயது சிறுமியை தாயாக்கிய 21 வயது இளைஞனை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
8வது வோர்டில் சிறுமியொருவர் பெண் குழந்தைக்கு தாயாகி சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
புத்தளம் – ஸ்மைல் புரத்தைச் சேர்ந்த இளைஞனே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த சிறுமியை வாகரே பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி வனாத்தவில்லுவ பிரதேசத்திற்குத் திரும்பி வந்து சிறுமியுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்