பொரலெஸ்கமுவ – போதிராஜபுர பகுதியில் தானியங்கி துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரிகளை சுட முற்பட்ட நபர், 3 உயிருள்ள தோட்டாக்களுடன் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலெஸ்கமுவ பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குற்றத்தடுப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போது, பொலிஸாரைக் கண்டு தப்பிச் செல்ல முற்பட்ட நபரை சோதனையிட முயன்ற போது, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக கூறப்படுகிறது.
சந்தேகநபரிடம் இருந்து தானியங்கி துப்பாக்கியுடன், மூன்று உயிருள்ள தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொரலெஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.