நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகளை முற்றாக அகற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதித்துறையானது நீதியரசருக்கோ சட்டத்தரணிகளுக்கோ அல்ல பொதுமக்களுக்கே சேவைகளை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நீதித்துறைக்கு POS Machin முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் மக்கள் வங்கியுடன் கைச்சாத்திடும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அபராதம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பணமாக மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு கொழும்பு நீதித்துறை பிராந்தியத்தில் Pos Machin அமைப்பை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன சமூகத்திற்கு ஏற்ற வகையில் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான கட்டளைகள் ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், தற்போதைய சமூகம் மிகவும் திறமையான முறையில் இணையம் மூலம் பரிவர்த்தனைகளை செய்வதை விரும்புவதால், அதற்கு தேவையான வசதிகளை வழங்குவது மிகவும் பொருத்தமானது என்றும் கூறினார்.