Saturday, December 20, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசவுதி அரேபிய தேசிய விமான சேவை மீண்டும் இலங்கையில்

சவுதி அரேபிய தேசிய விமான சேவை மீண்டும் இலங்கையில்

சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனம் விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சவுதி அரேபியாவின் பொருளாதாரம், திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிப்ராஹிம் இலங்கை விஜயத்தின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான சவுதி பயணிகளின் கணிசமான அதிகரிப்பு இந்த நடவடிக்கை பயனளிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பைசல் பின் அலிப்ராஹிம் இந்த விஜயத்தின் போது, ​​வர்த்தகம், முதலீடு, மின்சாரம், எரிசக்தி, சுற்றுலா, கலாசார தொடர்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles