Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேர் கைது

சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேர் கைது

சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் இன்று (29) அதிகாலையில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கையின் போது 04 டிங்கி படகுகள், சுமார் 1,670 கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

மீன் வளத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் படி வடமேற்கு கடற்படையினர் கொண்டச்சிக்குடா பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 12 பேரும், கடலட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles