கொழும்பு விக்டோரியா பாலத்தின் ஊடாக பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் களனி ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.