இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (30) இரு தரப்பு பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த போர்நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது.
நேற்று (29) காசாவில் 10 இஸ்ரேலியர்களையும் 4 தாய்லாந்து நாட்டவர்களையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
அதற்கு இணையாக இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பாலஸ்தீனியர்களும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.