இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்ந்தும் நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று (29) தெரிவித்துள்ளது.
அணியின் துணை பயிற்சியாளர்கள், ஊழியர்களின் பதவி காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நடந்து முடிந்த 2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துடன் நிறைவுக்கு வந்தது.
எனினும், பிசிசிஐ அவரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.