Thursday, January 15, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை

பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை

பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருடாந்தம் 75,000 புகையிலை தொடர்பான மரணங்கள் பதிவாகுவதுடன், அதனை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சிகரெட்டின் விலை படிப்படியாக அதிகரிக்கப்படும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்சில் கடற்கரைகள், பொது பூங்காக்கள், காடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பல பொது இடங்களில் விரைவில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் என்றார்.

அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles