Wednesday, August 27, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜெரொம் பெர்னாண்டோ

நாடு திரும்பினார் ஜெரொம் பெர்னாண்டோ

மத போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (29) அதிகாலை 01:32 மணியளவில் தோஹா கத்தாரில் இருந்து QR 658 என்ற விமானத்தில் அவர் இலங்கை வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தரையும் ஏனைய மதங்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ சம்பவத்தின் பின்னர் தலைமறைவானார்.

எனினும் கடந்த 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் ஆஜராகி 48 மணித்தியாலங்களுக்குள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles