Thursday, January 15, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை - பதில் பொலிஸ்மா அதிபர்

தேசிய பாதுகாப்பிற்கே முன்னுரிமை – பதில் பொலிஸ்மா அதிபர்

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதன் பின்னர், அவர் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட தேஷ்பந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக வருவதற்கு முன்னர் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles