இந்த வருடமும் சேனா புழுவின் தாக்கத்தால் மக்காச்சோளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சேனா புழுவினால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு விவசாய திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு, சிறிய அளவிலான விவசாயப் பங்கேற்புத் திட்டங்களின் கீழ், அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சுமார் 40இ000 ஏக்கர் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.