வெலிப்பன்ன பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
மொஹமட் அமீன் பாத்திமா அஸ்மியா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.
குறித்த யுவதி நேற்று (27) இரவு முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவர் வீட்டின் பின் கதவு வழியாக சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமியின் செருப்பு ஒன்றும் வீட்டின் அருகில் உள்ள வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.