இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50,000 ரூபா பண மூடை ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) பாராளுமன்றத்தில் நிரோஷன் பெரேரா எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளில் உதவி அத்தியட்சகர் தலைமையில் உள்ளக விசாரணை ஒன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை ஒன்றும் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு மத்திய வங்கியின் ஆளுநர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.