Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுரங்குளி பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

மதுரங்குளி பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்தின் வீதியோரத்தில் இனந்தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

உயிரிழந்தவர் சுமார் 36 வயது மதிக்கதக்க ஒருவர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பொலிஸாருக்கு இன்று காலை 6.30 மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், குழு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு,இ முதற்கட்ட விசாரனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை மேற்கொண்டனர்.

மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன்இ தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles