Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளை வன்புணர்ந்த தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார்

மகளை வன்புணர்ந்த தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார்

அம்பாறை – குமண பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னல்கம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அவர் தனது 16 வயது மகளுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மனைவி வெளிநாடு சென்ற பிறகு, தனது மகளுடன் வலுக்கட்டாயமாக பாலுறவு வைத்துள்ள அவர், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமன பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், குறித்த அதிகாரி மேலும் இரு பொலிஸ் அதிகாரிகளுடன் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, ​​சந்தேகநபர் தனது வீட்டின் சமையல் அறைக்கு அருகில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles